தென்கொரியா அதிபர் மாளிகையை வடகொரியா தாக்கி அழிக்கும் வீடியோ வெளியிடப்பட்டது
வடகொரிய நாட்டின் இளம்வயது அதிபரான கிம் ஜாங் உன், சமீபகாலமாக அண்டைநாடான தென் கொரியா மற்றும் அதன் ஆதரவு நாடான அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல்வேறு வகையிலான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.
இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை கடந்த மாதம் பரிசோதித்தது.
இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஆற்றல் படைத்த மேலும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது.
இந்நிலையில், தென் கொரியா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘புளூ ஹவுஸ்’ மாளிகையை வடகொரியா ஏவுகணைகளால் தாக்கித் தகர்க்கும் வீடியோவை வடகொரியா அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
‘எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால்..,’ என்ற எச்சரிக்கையுடன் தொடங்கும் அதிர்ச்சியூட்டக் கூடிய சித்தரிப்பு காட்சிகள் கொண்ட இந்த வீடியோ 88 வினாடிகள் ஓடுகிறது. வடகொரியா அதிபரின் மாளிகை மற்றும் சியோல் நகரில் உள்ள முக்கிய கட்டிடங்களை வடகொரியா நாட்டு ஏவுகணைகள் தாக்கி அழிப்பது போலவும், சியோல் நகரமே தீக்கோளமாக காட்சியளிப்பது போன்றும் முடியும் அந்த விடியோவில், (‘எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால்..,’) ‘எல்லாமே சாம்பலாகிப் போகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply