எனது மகனுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை? குமார் குணரட்னத்தின் தாய்
எனது மகனுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் குமார் குணரட்னத்தின் தாய் ராஜமணி குணரட்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் கேகாலை சிறையிலிருந்து அனுராதபுரம் சிறைக்கு தனது மகனை மாற்றியது குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு குமார் குணரட்னத்தை அனுராதபுரம் சிறைக்கு மாற்றியதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலையில் பிறந்து அங்கு கல்விகற்று பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விகற்ற தனது மகனிற்கு ஏன் பிரஜாவுரிமையை வழங்கமுடியாது என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ள அவர் எனது மூத்தமகன் ரஞ்சிதனும் பல்கலைகழக மாணவ அமைப்பில் உறுப்பினராக காணப்பட்ட வேளை கைது செய்யப்பட்டு காணமற்போனார்.
தனது மகனிற்கு பிரஜாவுரிமையை வழங்குமாறும் அவரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என குமார் குணரட்னத்தின் தாய் ராஜமணி குணரட்னம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply