42 எம்.பிக்கள் ஒப்பமிட்டு சபாநாயகரிடம் கையளிப்பு
பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்று(05) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் கைச்சாத்திட்டு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையளித்துள்ளனர். அமைச்சருக்குச் சொந்தமான வாகனம் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இது தொடர்பில் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டே அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிரணியில் உள்ள 42 எம்பிக்கள் இதில் கைச்சாத்திட்டிருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்பி குறிப்பிட்டார். அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக அமைச்சர் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை அந்தப் பதவியிலிருந்து விலக்குமாறும் தமது நம்பிக்கையில்லா பிரேரணையில் கோரிக்கை விடுத்திருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி ஏற்கனவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply