பாகிஸ்தானுக்கு 9 ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

Helikopter இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ‘ஏ.எச். 1 இசட் வைபர்’ ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 9-ஐ விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான விலை 170 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,122 கோடி) ஆகும். இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெல் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ‘ஏ.எச்.-1 இசட் வைபர்’ ரக ஹெலிகாப்டர்கள்-15, ‘டி-700 ஜிஇ 401 சி’ என்ஜின்கள்-32, ஏஜிஎம்-114 ஆர் ஹெல்பயர்-2 ரக ஏவுகணைகள்-1000 ஆகியவற்றை வழங்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இவைபோன்று மேலும் ஏராளமான போர் தளவாடங்கள் வழங்குமாறும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply