மஹிந்தவின் பாதுகாப்புக்கு 103இராணுவம்,103 பொலிஸார்

LUXMANமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று(06) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அவரின் உயிரை பாதுகாக்கும் தேவை எமக்கும் இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர், அவரின் பாதுகாப்புக்கு 103 இராணுவத்தினரும், 103 பொலிஸாரும் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டமை தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சபைமுதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனைக் கூறினார்.

 

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டின் தலைவராக இருந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் தொகை குறைக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்திருப்பதாக மாற்று எதிர்க்கட்சியே கூறி வருகிறது. அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது இவர்களே.

 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஐந்தாவது நிமிடமே அவருடைய சகல பாதுகாப்பும் நிறுத்தப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு எதுவும் செய்யவில்லை. சரத் பொன்சேகாவை இலக்கு வைப்பதற்காகவே அன்று அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டது.

 

இதேபோன்று வடமத்திய மாகாணசபைத் தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜனாக பெரேராவின் பாதுகாப்பை கடந்த அரசாங்கம் நீக்கி அவரை பயங்கரவாதிகளின் இலக்காக்கியது. மறுநாளே அவர் கொலை செய்யப்பட்டார்.

 

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைக் குறைக்க எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. இன்று காலை (06/04) கிடைத்த தகவலையே இங்கு அறிவித்துள்ளேன். எமக்கும் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்கும் தேவை இருக்கிறது. எம்மிடம் மறைவான நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது என்றும் அவர் தெரிவித்ர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply