அமெரிக்காவில் விசா மோசடி வழக்கு: இந்தியர் உள்பட 21 ஏஜெண்டுகள் கைது

Visa usaஅமெரிக்காவின்  நியூஜெர்சி, நியூயார்க்,வாஷிங்டன்  மற்றும் வெர்ஜினியா ஆகிய நகரங்களில் விசா மோசடி வழக்கு சம்பந்தமாக 21 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை மாணவர்கள் மற்றும் வேலை செய்வதற்கு என விசா வழங்கபட்டு நியூ ஜெர்சி கல்லூரியில் கட்டணம் பெற்று கொண்டு தங்கவைகபட்டு உள்ளனர் என  நிதி துறை தெரிவித்து உள்ளது. இந்த 21 பேரில் 10 இந்திய அமெரிக்கர்களும் அடங்குவர்.

 

ரகசிய விசாரணை மூலம் இந்த 21 ஏஜெண்டுகள் கண்டறியபட்டு கைது செய்யபட்டு உள்ளனர். இவர்கள் மூலம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில்  குடியேற்ற அமைப்பை ஏமாற்றி பணம் பெற்று கொண்டு  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த ஏஜெண்டுகள் தங்கவைத்து உள்ளனர் என அமெரிக்க அட்டர்னி பால் ஜே பிஷ்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply