பாகிஸ்தானுக்கு அதி நவீன தொலைநோக்கிக் கருவி: அமெரிக்கா முடிவு

usa gunபாகிஸ்தான் ராணுவத்துக்கு அதிநவீன தொலைநோக்கிக் கருவிகளை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனிமூட்டம், தூசி, புகை போன்ற சூழலிலும் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளைத் துல்லியமாகப் பார்த்துத் தாக்க உதவும் தொலைநோக்கிகளை 1.7 கோடி டாலருக்கு (சுமார் ரூ.113 கோடி) விற்பனை செய்யவிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஏற்கெனவே, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி 8 அதிநவீன எஃப்-16 போர் விமானங்களையும், 9 ஏ.ஹெச்-1 இஸட் வைப்பர் ரக ஹெலிகாப்டர்களையும் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்தது நினைவுகூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply