‘கூகுள் பலூன்’ தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

maithiri  WiFi இலங்கையில் வைபை (WiFi) தொழில் நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘கூகுள் பலூன்’ திட்டத்துடன் தொடர்புபட்டு செயற்படும் அமெரிக்க Social Capital நிறுவன ஸ்தாபகர் சமல் பலிஹபிடிய இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் வைபை (WiFi) தொழில் நுட்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் கூகுள் நிறுவனமும், ICT நிறுவனமும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் சமல் பலிஹபிடிய ஆகிய இருவருக்குமிடையில் குறித்த தொழில் நுட்பத்தை பாதுகாப்பு பிரிவுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply