விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணா­விடின் ஆயுதம் தாங்­கிய கிளர்ச்­சிகள் மீண்டும் தலை­தூக்கும்: ஜனா­தி­பதி

maithiriஇந்­த­யு­கத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­விடின் எதிர்­கா­லத்தில் நாட்டை பிரிப்­பதற்­கான ஆயுதம் தாங்­கிய கிளர்ச்­சிகள் தலை­தூக்கும்.எனவே, இனப்­பி­ரச்­சி­னைக்கு நாம் தீர்வு காண­வேண்­டி­யது அவ­சியம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் அர­சாங்கம் நடத்­து­வ­தற்கு உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்டு வழி­காட்­டி­யவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஆவார் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்றுவெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 1956 எஸ.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­ய­காவின் மக்கள் புரட்சி சுதந்­திர வெற்­றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் இசைக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும். இந்­நி­லையில் ஜனா­தி­பதி அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

பண்டா – செல்வா ஒப்­பந்தம், டட்லி – செல்வா ஒப்­பந்த ஆகி­ய­வற்றின் மூலம் அன்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்றுக் கொடுக்க முயற்­சிக்­கப்­பட்­டது. ஆனால் எதிர்ப்­புகள் கார­ண­மாக அந்த உடன்­ப­டிக்­கையை தீவைத்து எரிக்கும் நிலைமை அன்று பண்­டா­ர­நா­ய­கா­வுக்கு ஏற்­பட்­டது. ஆனால் அன்று உண்­மையில் இதனை எதிர்த்­த­வர்கள் உடன்­ப­டிக்­கையின் சாதகம், பாதகம் தொடர்­பான பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருக்க வேண்டும். அவ்­வாறு செய்­யாது அது கிழித்து எரி­யப்­பட்­ட­தனால் இன்றும் இனப்­பி­ரச்­சினை தீராமல் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply