கேரளா கோவில் தீ விபத்து: மோடியிடன் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்

Nawaz-Sharifகேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியான துயரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில்  நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 108 பேர் பலியாகி உள்ளனர். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

 

இந்நிலையில் இந்த துயரச் சம்பத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தனது வருத்தங்களை கூறினார்.

 

முன்னதாக, கேரள மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply