பாரீஸ், பிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பில் கைதான குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்
பாரீஸ் நகரில் மும்பை பாணியில் பயங்கர தாக்குதல்கள் நடத்தி 130 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, முகமது அப்ரினி. இவன், பிரசல்ஸ் நகரின் புறநகரில் கைது செய்யப்பட்டான். அவனுடன் ஒசாமா கிராயெம் என்ற தீவிரவாதியும் போலீசாரிடம் சிக்கினான். முகமது அப்ரினியின் தோற்றம், பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது மாயமான தொப்பி அணிந்த தீவிரவாதியை போன்று இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
இந்தநிலையில் அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன், “பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது தொப்பி அணிந்து காணப்பட்டது நான்தான்” என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி உள்ளான். மேலும் விமான நிலைய தாக்குதலை தொடர்ந்து அவன் தனது மேல்-சட்டையை குப்பை தொட்டியில் எறிந்து விட்டதாகவும், தனது தொப்பியை விற்றுவிட்டதாகவும் கூறினான். எனவே பாரீஸ், பிரசல்ஸ் ஆகிய இரு நகரங்களில் நடந்த தாக்குதலிலும் அவனது தொடர்பு உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே பிரசல்ஸ் தீவிரவாத கும்பல், முதலில் பிரான்சில்தான் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாரீஸ் தாக்குதல் வழக்கின் விசாரணையில் துரிதமான முன்னேற்றம் காணப்பட்ட நிலையில்தான் பிரசல்ஸ் நகரில் தாக்குதல் நடத்த அதிரடியாக முடிவு எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply