மிக குறைந்த விலையில் காதுகேட்கும் கருவி தயாரித்த அமெரிக்க வாழ் இந்திய மாணவன்
அமெரிக்காவில் கென்டக்கு மாகாணத்தில் உள்ள ஜயிஸ்வில்லே நகரை சேர்ந்த மாணவன் முகிந்த் வெங்கடகிருஷ்ணன் (16). அமெரிக்க வாழ் இந்தியரான இவன் துபோந்த்மேனுவல் உயர்நிலைப்பள்ளியில் 11–வது வகுப்பு படிக்கிறான். சமீபத்தில் ஜெபர்சன் கவுண்டியில் உள்ள பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மாணவர்கள் தங்களது அரிய கண்டுபிடிப்புகளை வைத்து இருந்தனர்.
அதில், மாணவர் முகுந்த் வெங்கடகிருஷ்ணன் காது கேட்கும் கருவியை தயாரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்திருந்தான். அது மிகவும் குறைந்த விலையில் அதாவது 4 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதாகும். அதுவும் 7 விதமாக அலை வரிசைகளில் பல குரலில் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக அவன் இக்கண்காட்சியில் முதல் பரிசும், பாராட்டும் பெற்றான். இந்த காது கேட்கும் கருவி தயாரிக்க இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்த தனது தாத்தா, பாட்டியே காரணம் என அவன் தெரிவித்தான்.
அவனது தாத்தாவுக்கு காது கேட்கும் கருவி பொருத்த ஒரு ஆஸ்பத்திரிக்கு முகுந்த் அழைத்து சென்றான். டாக்டருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது. முடிவில் காது கேட்கும் கருவி மாட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை செலவானது.
இது போன்று வசதி படைத்தவர்கள் மட்டுமே காது கேட்கும் கருவியை பயன்படுத்த முடியும். ஏழை, எளியவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, மிக குறைந்த செலவில் தயாரித்தாக மாணவன் முகுந்த் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்தான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply