அமெரிக்க போர்க் கப்பல் அருகில் ரஷ்ய விமானங்கள் பறந்தது தொடர்பாக ரஷ்யா விளக்கம்

fiterசமீபத்தில் அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். டொனால்ட் குக் பால்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது ரஷ்யப் போர் விமானங்கள் தொடர்ந்து அந்தக் கப்பலுக்கு அருகில் பறந்தன. அதிலும் ஒரு போர் விமானம், கப்பலுக்கு மிக அருகில் பறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனஷென்கோவ், அமெரிக்க கப்பலைப் பார்த்த பிறகு ரஷ்ய விமானிகள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த சம்பவம் தொடர்பாக கவலையுடன் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply