ராணி எலிசபெத் காதல் கடிதம் ஏலம்
இங்கிலாந்து ராணி எலிசபெத். இவரது கணவர் இளவரசர் பிலிப் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது ‘ராயல் வெட்டிங்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதிய பெட்டி ஸ்பென்சர் என்பவருக்கு ராணி எலிசபெத் ஒரு கடிதம் எழுதினார்.இளவரசர் பிலிப்புடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது.
ராணிஎலிசபெத் கடந்த 1942-ம் ஆண்டில் 21 வயதாக இருந்த போது இளவரசர் பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அக்கடிதத்தில் இளவரசர் பிலிப்புடன் நடந்த சந்திப்புகள், கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றது மற்றும் சுவாரசியமான உரையாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அக்கடிதம் அடுத்த வாரம் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷித் சிபன் காம் மையத்தில் ஏலம் விடப்படுகிறது. இது சுமார் 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு (1200 பவுண்டுகள்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply