ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு
ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் குமமோட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் பவ்லேறு இடங்களில் வீடுகள் விரிசல்கள் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது கயூஷில் தீவில் உள்ள குமட்டோ நகரின் கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகினர். 650-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply