ஜனா­தி­பதி– வடக்கு முதல்வர் திங்கட்கிழமை சந்­திப்பு இடம்பெறவுள்ளது

maithiri vikiஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு எதிர்­வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது.ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் வடக்கு மக்­களின் காணிப் பிரச்­சினை மற்றும் சிவில் நிர்­வா­கத்­திற்­கான தடைகள் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும். வடக்கில் சிவில் நிர்­வாகம் இரா­ணு­வ­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் ஜன­நா­யக உரி­மை­களை அனு­ப­விப்­பதில் தமிழ் மக்கள் சவால்­களை எதிர்கொள்­வ­தாக, கடந்த வாரத்தில் இடம்­பெற்ற வட மாகாண சபை அமர்­விலும் அதற்கு முன்­னரும் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இந் நிலை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் திங்கட் கிழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள் ளார்.

வடக்கு மக்­களின் விடு­விக்­கப்­ப­டாத காணிகள், விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்­களால் குடி­யே­ற­மு­டி­யாத நிலை உள்­ளிட்ட சிவில் நிர்­வா­கத்­திற்­குள்ள தடைகள் போன்ற பிரச்­ச­ினை­களை மையப்­ப­டுத்­தியே ஜனா­தி­பதி மற்றும் வட மாகாண முத­ல­மைச்சர் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

அந்­த­வ­கையில் திங்கட்கிழமை முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் ஜனா­தி­ப­தியை சந்­திக்கும் போது வடக்கில் நிலவும் சிவில் நிர்வாகத்திற்கான நெருக்கடிகள் மற் றும் அனைத்து பிரச்சினைகளையும் ஜனா திபதியின் கவனத்திற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply