2015–ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு?
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கடந்த 2015–ம் ஆண்டில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலர் (சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம்) சம்பாதித்துள்ளனர் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.அவர்கள் இருவரும் சேர்ந்து 81 ஆயிரத்து 472 டாலர் (சுமார் ரூ.54 லட்சம்) வருமான வரி செலுத்தி உள்ளனர்.
ஒபாமா தம்பதியர் தங்களது மொத்த வருமானத்தில் 14.7 சதவீதம் தொகையை 34 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply