ஈரான் புறக்கணிப்பு பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்த முயன்ற 18 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பின்னடைவு

iranசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில் உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடர்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற பெட்ரோல் உற்பத்தி செய்யும் 18 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர்களுக்கும் கீழாக சரிந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோகியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்தன.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதற்காக, சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி அல் நைமி, நைஜீரியா, வெனிசுலா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பெட்ரோலியத்துறை மந்திரிகள் தோஹா நகருக்கு வந்தனர்.

கத்தார் நாட்டின் எரிபொருள் மற்றும் தொழில்துறை மந்திரி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரான் கையொப்பமிடாது என ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்நிலையில், நேற்று தோஹாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்ததாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெட்ரோல் உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடர்பாக புதிய செயல் திட்டத்தை உருவாக்க நாளாகலாம் என்பதாலும், தற்போது சர்வதேச சந்தியில் கச்சா எண்ணெய்யின் விலைகள் ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும் இந்த கூட்டத்தில் புதிய முடிவு ஏதும் எட்டப்படவில்லை என எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ’ஓப்பெக்’ அமைப்பின் தலைவரும், கத்தார் நாட்டின் எரிபொருள் மற்றும் தொழில்துறை மந்திரியுமான முஹம்மது பின் சாலே அல் சதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோலிய உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஈரான் போன்ற நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்தாதவரை இதரநாடுகள் மட்டும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதால் சர்வதேச சந்தை விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 32 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துவரும் ஈரான், முதலில் தங்கள் நாட்டின்மீது உலக நாடுகள் விதித்துள்ள சர்வதேச பொருளாதாரத்தடை முழுமையாக விலக்கப்பட்டு, தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply