கோத்தாபயவை கைதுசெய்யுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை
அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அங்கு கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன. தமிழ் ஸ்போ ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் (American Tamil Forum) ஆகிய இரு அமைப்புக்களே இவ்வாறு கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் குற்றச்சாட்டுக்களின் முக்கிய நபராக கருதப்படும் ஒருவரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பை அமெரிக்கா தவறவிடக்கூடாது எனவும், அவ்வாறு தவறவிடப்படுமானால் ஏனைய போர் குற்றவாளிகளை அது ஊக்குவிப்பதாக அமையும் எனவும் குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply