டுவிட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி பேர்

whait houseடுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இதையடுத்து, அந்தப் பக்கத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதிவில், “”ஒரு கோடி பேரை அடைந்துள்ளோம். எங்களைப் பின் தொடரும் அனைவருக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இதுவரை 24,500 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

அதிபர் மாளிகையின் டுவிட்டர் பக்கத்தை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் அதே வேளையில், அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தை 7.34 கோடி பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply