21 இலட்சம் ரூபா செலவில் ஏழு பேருக்கு விருந்து வைத்த முன்னாள் பிரதமர்
முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்னவின் பதவிக்காலத்தில் அவரது இல்லத்தில் ஏழுபேருக்கு வழங்கப்பட்ட ஒருநேர உணவுக்கு இருபத்தியொரு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்ன பிரதமராக பதவி வகித்த காலத்தில் ப்ளவர் வீதியில் உள்ள விசும்பாயவை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவரது அலுவலக மற்றும் இல்லத்தில் நடைபெறும் விருந்து வைபவங்களுக்கான உணவு, பானம் என்பவற்றை வழங்கும் பொறுப்பு ஹில்டன் ஹோட்டலுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவரது பதவிக்காலத்தின் கடைசி ஐந்து மாதங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களுக்கான உணவு, பான வகைகளுக்கு மட்டும் 40 லட்சம் ரூபா வரையான பாக்கித் தொகையை நிலுவையில் இருப்பதாக ஹில்டன் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் ஏழு இலங்கையருக்கு அவர் அளித்துள்ள ஒரு நேர உணவிற்காக மட்டும் உயர்தர உணவு வகைகளை இருபத்தியொரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாவுக்கு தருவித்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அத்துடன் இன்னொரு நாள் தேநீர் விருந்துக்காக மூன்றரை லட்சம் ரூபாவும், பிறிதொரு நாளில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு விருந்தளிப்பதற்காக 17 லட்சம் ரூபாவுக்கு உணவு, பான வகைகள் தருவித்துக் கொண்டிருப்பதாகவும் ஹில்டன் ஹோட்டல் அறிவித்துள்ளது.
எனினும் இது குறித்த பாக்கித் தொகையை செலுத்துமாறு பிரதமர் அலுவலகத்திடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், ஆட்சி மாற்றத்தின் காரணமாக தங்களுக்குரிய நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்றும் ஹில்டன் நிர்வாகம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply