குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கம் இதுவே : லால்காந்த
இலங்கை வரலாற்றில் குறைந்த காலத்துக்குள் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இதுவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.ஒன்றாக இணைந்து எடுக்கும் தீர்மானங்களுக்கு மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்டும் போது ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொள்ளும் அரசாங்கமே இதுவாகும்.வட் வரி அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து இவரிடம் வினவப்பட்டதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால பெரும்பாலும் பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்தே அரசாங்கத்தின் சில விடயங்களை அறிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வட் வரி அதிகரிப்பு குறித்தும் அவ்வாறுதான் ஜனாதிபதி தெரிந்துகொண்டுள்ளார்.
அரச தலைவர் என்ற வகையில் தனது பொறுப்பை அவர் செய்யாதிருப்பது போல, ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதியை கேட்காது தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply