அதிமுக தேர்தல் அறிக்கை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்தல் அறிக்கையை தயாரித்து கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவிடம் ஏற்கனவே வழங்கிவிட்டார்கள். தற்போது, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு அம்சங்களையும் தானே ஆராய்ந்து, அதில் உள்ள திட்டங்களுக்கு மெருகேற்றி வருகிறார்.
அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்கு வழிகாட்டியாக இந்த தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்பதால் வரிக்குவரி தனது கைவண்ணம் மின்னும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறுதி வடிவம் கொடுத்து வருகிறார்.
மக்களுக்கு நலன்பயக்கும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்களும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் அறிக்கைக்கு ஜெயலலிதா இறுதி வடிவம் கொடுத்ததும், உடனடியாக அச்சிடும் பணிக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுவிடும் என்பதால், எந்த நேரத்திலும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என தெரிகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வரும் 25-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு முன்னதாக கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply