குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் பதவி விலக தயார்: நவாஸ் ஷெரிப் சவால்
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் குடும்பமும் வரி ஏய்ப்பு செய்ததாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நவாஷ் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள நவாஸ் ஷெரிப் ” வரி ஏய்ப்பு செய்ததாக என் மீது குற்றசாட்டுபவர்களுக்கு சவால் விடுகிறேன், குற்றசாட்டுக்கான ஆதாரத்தை காட்டுங்கள். என் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நான் பதவி விலக தயார்” என்று தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரிப், வெளிநாட்டில் வாழும் மகன் மூலம் ஏராளமான பணம் குவிக்கப்பட்டிருப்பதாக குற்றசாட்டு முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply