பாகிஸ்தானில் சீக்கிய மந்திரி சுட்டுக்கொலை

pksபாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாண சிறுபான்மையின துறை மந்திரியாக இருந்தவர் சர்தார் சோரன்சிங். சீக்கியரான இவர் கைபர் பக்துன்னகவா மாகான முதல்– மந்திரியின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார். நேற்று இவர் புனேர் மாவட்டத்தில் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது கொலைக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அவரது தலையில் ஒரு துப்பாக்கி குண்டு மட்டுமே பாய்ந்து இருந்தது.

மந்திரி கொலை செய்யப்பட்டதற்கு கைபர் பக்துன்கவா கவர்னர் இக்பால் ஷாபார் ஜாக்ரா மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மந்திரி சர்தார் சோரன் சிங் டாக்டர் ஆவார். டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்.

இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்–இ– இன்சாப் கட்சியை சேர்ந்த இவர் இதற்கு முன்பு ஜமாத்–இ–இஸ்லாமி பாகிஸ்தான் அமைப்பில் 9 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply