கிழக்கு மாகாண ஆளுனராக பஸீர் சேகு தாவூத்
ஜனாதிபதி மைத்திரிபாலாவை முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் சந்தித்ததை அடுத்து,முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதினால் நியமிக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது.அவ்வாறு இருக்க சல்மான் இராஜினாமாச் செய்யும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு வன்னி மாகாண சபை உறுப்பினர் நியமிக்கப்படலாம் என நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றன.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஹக்கீம் வெகு விரைவில் நியமிக்கப்பட உள்ளதுடன் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் நியமிக்கப்படவுள்ளார்.
இதனால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை எதிர் பார்த்திருந்த நிசாம் காரியப்பர் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணிகள் மனவருத்தம் அடைந்துள்ளார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply