மே 2 ஆம் திகதி நான் தூக்கில் தொங்குவேன் மொரட்டுவ மாநகர பிதா
கூட்டு எதிர்க் கட்சியின் கிருலப்பனை மே தினக் கூட்டத்தில் 99 வீதமான உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டால், தான் மொரட்டுவ மா நகர சபையின் முன்னால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என மொரட்டுவ மா நகர சபையின் தலைவர் சுஜித் புஷ்பகுமார சவால் விடுத்தார்.வட மேல் மாகாண சபையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் ஒன்றியம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காரியாலயத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது 99 வீதமானவர்கள் கிருலப்பனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே நேற்று அவர் இந்த சவாலை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply