25 நாட்களுக்கு பிறகு அன்புமணியால் புதிய தமிழகம் உருவாகும்: டாக்டர் ராமதாஸ்
வந்தவாசியில் நடந்த தேர்தல் பிரசார பொது கூட்டத்தல் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது.அரசியலில் எதிர் எதிராக இருந்து லாவணி பாடினாலும் மது விஷயத்தில் இருவரும் கூட்டு வைத்துள்ளனர். மதுவிலக்கு கொண்டு வருவதில் கலைஞர் சட்டம் கொண்டு வருவோம் என்கிறார்.அம்மையார் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்கிறார். எப்படி இருந்தாலும் இது இந்த ராமதாசுக்கு கிடைத்த வெற்றி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
ஊழல் இல்லாத தமிழகத்தையும், மதுவில்லாத தமிழகத்தையும் உருவாக்குவோம் என அன்புமணி ராமதாஸ் உறுதி கூறுகிறார். மக்கள் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அன்புமணியையும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் அன்புமணி அலை வீசுகிறது. அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் கொண்டு வந்தார், இது, அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். ஆனால், இங்குள்ளவர்கள் நாங்கள் தான் கொண்டு வந்தோம் எனப் பொய் சொல்லி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த 2 ஊழல் கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இருகட்சிகளுமே கொள்கை இல்லாத கட்சிகளாகும். இதற்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களும், பெண்களும், அனைவரும் அன்புமணி ராமதாசுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
செய்யாறில் ஆரணி கூட்ரோடு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
தமிழகத்தில் வாக்கு சதவீதத்தில் 51 சதவீதம் வாக்குகளை கொண்ட பெண்கள் பா.ம.க.வின் ஆட்சிதான் என தீர்மானித்து விட்டனர். 25 நாட்களுக்கு பிறகு புதியதோர் தமிழகம் அன்புமணியால் உருவாகப் போகிறது.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமிக்கு சொந்தமான குடோனில் 4.75 லட்சம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வந்தும், ரூ.10 லட்சம் மட்டுமே பிடிபட்டதாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடக்க வேண்டும், அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply