அதிகாரப் பேராசை அரசியலில் மஹிந்த, கிரிக்கட்டில் அர்ஜுண
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பேராசை போன்றே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கிரிக்கட் அதிகார பேராசை காரணமாக அவமானப்பட்டுக் கொண்டிருப்பதாக ராவய பத்திரிகை விமர்சித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தோற்ற பின்பும் மீண்டும் அரசியலில் தலையெடுக்க நினைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்காக பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.இந்நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ஜனாதிபதி பதவியில் ஆயுள் வரைக்கும் உட்காரும் பேராசை அவருக்குள் உருவானது.
அதே போன்று கிரிக்கட் உலகக் கோப்பையை வென்று வந்த ஒரே காரணத்துக்காக கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரம் தன்னிடம் மட்டுமே தொடர்ந்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
அதற்கான தேர்தலில் வெல்ல முடியாத பட்சத்தில் இடைக்கால நிர்வாக சபை ஊடாகவேனும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவரது இலக்காக உள்ளது.
ஆனால் இலங்கைக் கிரிக்கட் அணியின் வீழ்ச்சிக்கு அர்ஜுன ரணதுங்கவும் ஒருவகையில் காரணம் என்று கூறலாம்.
அவர் அணிக்குத் தலைமை வகித்த காலத்தில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க ஒருபோதும் முன்வந்ததில்லை.
அத்துடன் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையில் பாரிய ஊழல்களை மேற்கொண்ட அவரது சகோதரர் நிஷாந்த ரணதுங்கவின் கீழ் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர் விரும்புகின்றார்.
இதன் மூலம் ஊழலுக்கும் வழியேற்படுத்திக் கொடுக்க விழைகின்றார்.
ஆயினும் இடைக்கால கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஒன்றை தாபிக்கப் போவதில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் அர்ஜுனவின் கனவில் மண் விழுந்துள்ளதாகவும் ராவய பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply