அமெரிக்காவின் போர் விமானங்கள் ரஷ்யாவுக்கு அருகில் தரையிறக்கம்

jet usaஅமெரிக்காவின் இரு மேம்பட்ட போர் விமானங்கள் முதல் முறை கறுங்கடலுக்கு மேலால் பறந்து ருமேனயாவில் தரையிறங்கியுள்ளன. ரஷ்யாவுக்கு நெருங்கிய தொலைவிலேயே இந்த விமானங்கள் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.எப்-22 ரெப்டர் போர் விமானங்கள் இரண்டும் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் பிரிட்டனில் இருந்து நேற்று முன்தினம் ருமேனிய விமானத்தளத்தை அடைந்துள்ளது.

“நேட்டோ அல்லது ஐரோப்பா எங்கும் எமக்கு தேவையான இடத்திற்கு எப்-22 ஐ கொண்டுசெல்லும் திறனை காட்டியிருக்கிறோம்” என்று அமெரிக்க போர்க்கப்பல் கட்டளை தளபதி டானியல் லொஹொஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய அங்கத்துவ நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த பிராந்தியத்தில் இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்கா உறுதி அளித்திருந்தது. எப்-22 போர் விமானம் பெரும்பாலும் ராடாரில் சிக்கும் சாத்தியம் குறைவாக உள்ளது. இந்த விமானத்தை வெளிநாடுகளுக்கு விற்க அமெரிக்க கொங்கிரஸ் அவை தடை விதித்துள்ளது. இதில் 22 விமானங்கள் கிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply