அமெரிக்காவில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக துன்புறுத்திய இந்தியருக்கு 19 ஆண்டு சிறை

Indian usaஅமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் (வயது 32). இவர் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது தன்னுடன் படித்த சக மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அந்த பெண்ணை பின் தொடர்தல், வீட்டுக்கு சென்று மிரட்டுதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஜிதேந்தர் சிங் ஈடுபட்டு வந்தார்.

 

2007-ம் ஆண்டு அந்த பெண் மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். ஆனாலும் ஜிதேந்தர் சிங்கின் தொல்லை ஓயவில்லை. இந்தியாவில் உள்ள அந்த பெண்ணின் தந்தையை அவர் தாக்கினார். இது தொடர்பான வழக்கில் அவர் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த பெண்ணை பின் தொடரமாட்டேன் எனவும் உறுதி அளித்தார்.

 

ஆனால் மாறாக ஜிதேந்தர் சிங் அமெரிக்கா சென்று அந்த பெண் படித்து வந்த நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். பல்கலைக்கழகம் அதனை மறுத்துவிட்டது. பின்னர் அந்த பெண் பயிற்சிக்காக கலிபோர்னியா மாகாணத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கு உள்ள அவரது முகவரியையும் கண்டுபிடித்து ஜிதேந்தர் சிங் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. வேலைக்காக அவர் பிளானோ நகருக்கு குடிபெயர்ந்தார்.

 

2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தொலைபேசி மூலம் அந்த பெண்ணை துன்புறுத்தி வந்த ஜிதேந்தர் சிங், இறுதியில் அந்த பெண்ணின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்தார். ஆனால் அங்கு சென்ற போது அந்த பெண் வீட்டில் இல்லை. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகளை திருடினார். இது தொடர்பாக ஜிதேந்தர் சிங் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி தொடர்ந்து 8 ஆண்டுகளாக பெண்ணை துன்புறுத்தி வந்த குற்றத்திற்காக அவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply