வில்லன் கருணாநிதி, வில்லி ஜெயலலிதா: டிவிட்டரில் சாடிய விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இன்று உரையாடினார். அதில், உங்களுக்கு பிடித்த வில்லன் யார் என கேட்கப்பட்டுள்ளதற்கு, வில்லன் கருணாநிதி, வில்லி ஜெயலலிதா என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் சமூக வலைதளத்திலும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் @iVijayakant என்ற முகவரியில் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 10:30 முதல் 11:30 மணி வரை ட்விட்டர் தளத்தில் #Tweet2Vijayakant என்ற ஹெஷ்டேக்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தார் விஜயகாந்த்.
சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து?
ஹா ஹா ஹா
நீங்கள் ஒரு பவரான ஸ்டாராக இருந்தீர்கள். ஆனால் மக்கள் உங்களை பவர் ஸ்டாராக நினைக்கின்றார்கள்? அதற்கு காரணம் என்ன ?
இப்போதும் பவரான ஸ்டாராகத்தான் இருக்கிறேன்
அம்மாவோட ஆட்சியில இந்த நாடே தள்ளாடுதே அதுக்கு ஏதாச்சும் புரட்சிகரமா தீர்வு வச்சிருக்கீங்களா?
இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
‘மாற்றத்தை அளிப்போம்’ என்ற முழக்கமிடும் திமுக,அதிமுக தவிர ஏனைய பாமக, நா.ம, பிஜேபியிலிருந்து உங்கள் அணி எவ்வாறு வேறுபடுகிறது?
நாங்கள் உண்மையான மாற்றத்தை தருவோம்.
ஒரு அரசியல்வாதியாக உங்களது பலம் மற்றும் பலவீனம் என்ன?
நம்புவது
உங்க கூட்டணியின் பலம் என்ன?
உங்கள் கேள்வியில் பதில் இருக்கிறது.
நீங்கள் முதலமைச்சரானதும் உங்கள் முதல் கையெழுத்து என்ன?
முதலமைச்சராகும் கையெழுத்து.
வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்குதல்: இது சாத்தியமா ?
சாத்தியமே
விவசாயத்தையும் இயற்கை சூழலையும் பாதுகாக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அமைப்பீர்களா?
அமைப்பேன்
நீங்கள் அரசியலுக்கு வந்தப்ப மக்கள் நம்பினாங்க. ஆனா இப்ப கோமாளியா தான் பாக்கறாங்க. இது உங்களுக்கு தெரியுதா?
நிழல் வேறு நிஜம் வேறு. மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஊழலை ஒழிக்க தனி அமைப்பு அமைக்கப்படுமா? அல்லது லோக் ஆயுத்தா கொண்டுவரப்படுமா?
லோக் ஆயுக்தாவும் Anti corruption force போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.
நீங்கள் எடுத்த கூட்டணி முடிவு பற்றிச் சொல்லுங்கள்?
வெற்றிக் கூட்டணி
இன்றைய அரசியலில் இளம் தலைமுறையினர் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியம்?
ரொம்ப முக்கியம், அவர்கள் தான் எதிர்காலம்.
மீண்டும் எதிர்க்கட்சியாக அமர்வீர்களா?
இல்லை
ஒரு அரசியல்வாதியாய் திராவிட இயக்கங்ளின் ஆட்சியை அகற்ற நீங்கள் முன்னேடுக்கும் மாற்று அரசியல் என்ன?
ஊழலற்ற ஆட்சி.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், உங்கள் ஆதரவு யாருக்கு?
கேள்வியை மாற்றி என்னிடம் கேட்டு விட்டீர்கள்
உங்கள் பேச்சால் தான் உங்களுக்கு வாக்குகள் கம்மியாகும். உங்க குரலுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி உளறுகிறீர்கள்?
பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சித்தரிக்கின்றன
தொண்டையில் நோய் இருந்தால் உச்சரிப்புகள் புரியாமல் இருக்கும். ஆனால் உங்கள் கருத்துக்களில் கூட தெளிவு இல்லையே? ஏன்?
உங்ககிட்ட தான் தெளிவில்லை
உங்கள் மனம் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
எம்.ஜி.ஆர்
கேப்டன் டிவியில் பிடித்த நிகழ்ச்சி என்ன?
நான் டிவியே பாக்கிறதில்லை
நீங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது சகாயம் IAS தலைமை செயலாளராக ஈடுபடுத்தபடுவார் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?
நல்ல அதிகாரிகளை ஈடுபடுத்துவேன்.
5 ஆண்டுகளாக ஊடகங்களை புறக்கணித்திருக்கையில் உங்கள் பிரச்சாரம் மட்டும் உங்கள் கொள்கைகளை பரப்ப உதவிடுமா?
மக்கள் நினைத்தால் எதுவும் முடியும்.
முன்னிருந்த தெளிவு ஏன் இப்பொழுது உங்கள் பேச்சில் இல்லை?
உங்கள் பேச்சில்தான் இல்லை.
மே 16-ல் யார் ஜெயிக்க போகிறார்கள்?
தேர்தலிலா அல்லது வேறேதிலுமா?
உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்! ?(வைகோவைத் தவிர)
வைகோ ஹீரோ. வில்லன் கருணாநிதி. வில்லி ஜெயலலிதா.
உங்களோட அடுத்த படம் என்ன? டைரக்டர் யாரு??
தமிழன் என்று சொல். டைரக்டர் அருண் பொன்னம்பலம்.
உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் பற்றி உங்களுடைய கருத்து?
நான் கவலைப்படுவதில்லை.
இந்த கேள்வி பதிலைத் தொடர்ந்து விஜயகாந்த் “எதிர்காலம் இளைஞர்கள் கையில், வலைத்தளங்கள் வாயிலாக உங்களுடன் உரையாடியதில் சந்தோஷம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உரையாடுவேன். நேரம் மட்டும் விரைவில் சொல்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply