ஐ.தே.கட்சியின் கைதியாக மாறியுள்ளதால், சுதந்திரக் கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து: மகிந்த

mahindaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு கிருலப்பனையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.எனது ஆட்சிக்காலத்தில் எமது கட்சியின் வரலாற்றில் வலுவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப முடிந்தமை குறித்து நான் பொறுமையடைகின்றேன்.

எமது அரசாங்கம் வலுவாக இருந்த நிலையில்,சூழ்ச்சிகரமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எனது அரசாங்கத்திற்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததன் மூலமே எனது அரசாங்கத்தை தோற்கடிக்க முடிந்தது.

உள்ளிருந்த கிடைத்த உதவிகள் இல்லாவிட்டால், நான் கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் தோற்கடிக்க முடியாது.

எனது அரசாங்கம் தோற்டிக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இருந்து வருகிறார்.

அமைச்சரவையின் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பகிரப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானங்களை ஐக்கிய தேசியக் கட்சியே எடுத்து வருகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply