துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி
துருக்கியில் குர்து இன தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ராணுவத்துடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிற அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் துருக்கி அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் அங்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள நுசாய்ன் நகரில் நேற்று ராணுவ வீரர்கள் மீது குர்து இன தீவிரவாதிகள் கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே காஜியன்டெப் நகரில் போலீஸ் தலைமையகம் முன்பாக தீவிரவாதிகள் கார் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி உடல் சிதறி உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் அமைந்துள்ள பல கட்டிடங்களில் ஜன்னல்கள் தூள் தூளாகின.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply