மனிதர்கள் வாழத் தகுதியுள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுதியுள்ள 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் சுற்றித்திரியும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே இந்த 3 கோள்களும் தான் மிகச்சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புதிதாக கண்டுபிடித்த இந்த கிரகங்கள் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், இவை அளவிலும் வெப்ப நிலையிலும் பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிர்வாழ்வதற்கான ரசாயன தடயங்களை கண்டுபிடிக்க இது முதல் வாய்ப்பு என்று பெல்ஜியம் லீஜ் பல்கலைக்கழக வானியல் அறிஞர் மிக்கேல் கில்லன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply