மௌனம் கலைய வேண்டும் ஓமல்பே சோபித்த தேரர்
வட மாகாண சபை முதலமைச்சரின் சமஷ்டி யோசனை தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவது, அதனை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளமா? என சந்தேகம் எழுந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கூறியுள்ளார். ஒரு விடயம் தொடர்பில் மௌனம் சாதிப்பதானது, அதனை ஏற்றுக் கொண்டதற்கு சமமானது என பௌத்த போதனையொன்று காணப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு தீர்மானத்துக்கு எதிரான ஒரு கொள்கைப் பிரகடனத்தை மேல் மாகாண சபை மாத்திரமே கொண்டுவந்தது எனவும், ஏனைய மாகாண சபைகளுக்கு முதுகொலும்பு இல்லையா?
எனவும் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply