புதிய சரித்திரம்: லண்டனின் முதல் முஸ்லிம் மேயரானார் சாதிக் கான்
பிரிட்டன் தலைநகர் லண்டன் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சாதிக் கான், அந்நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற புதிய சரித்திரத்தை படைத்துள்ளார்.44 வயதான சாதிக் கான் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சேக் கோல்ட்ஸ்மித் போட்டியிட்டார். கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது.இந்நிலையில், சாதிக் கான் லண்டன் மேயர் தேர்தலில் வெறி பெற்றிருக்கிறார். 46% வாக்குகளை சாதிக் கான் பெற்றிருக்கிறார். இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிக் கான் சிறுவராக இருந்தபோதே அவரது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டது. இவரது தந்தை பேருந்து ஓட்டுநர். கான், மனித உரிமைகள் வழக்கறிஞர் தவிர கிழக்கு லண்டன் டூடிங் பகுதியின் எம்.பி.யும்கூட. இந்நிலையில் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.
சூடான பிரச்சாரம்:
ஆரம்பம் முதலே கோல்ட்ஸ்மித் லன் டன் மக்கள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது. சாதிக் கான் ஓர் அடிப்படைவாதி என பிரச்சாரம் செய்துவந்தார். ஆனாலும் 44 வயதான சாதிக் கான் லன்டன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
‘பயத்தை வெல்வோம்’
கோல்ட் ஸ்மித்துக்கு சரியான போட்டியளிக்கும் வீதம் சாதிக்கானும் பிரச்சாரம் மேற்கொண்டார். “முஸ்லிம்கள் மீதான தேவையற்ற பயத்தை மக்கள் கைவிட வேண்டும். பயத்தால் எதையும் சாதிக்க முடியாது. என்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் லண்டன் நகருக்கு முதல் முஸ்லிம் மேயர் கிடைப்பதோடு கடந்த 40 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருக்கும் வந்தேறிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும்” எனப் பிரச்சாரம் செய்து வந்தார்.
லண்டன் நகரில் வாழும் 80 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply