சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் தேர்வு

murali singapoorசிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான முரளி பிள்ளை வெற்றி பெற்றுள்ளார்.சிங்கப்பூரின் புறநகர் பகுதியான புகிட் படோக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்து வந்தவர் டேவிட் ஓங். ஆளும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்த எம்.பி.யான இவர் அதேகட்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தனது எம்.பி. பதவியை இவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆளும் மக்கள் செயல் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான முரளி பிள்ளை இந்த தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளரான சீ சூ ஜுவான் என்பவர் போட்டியிட்டார்.

99.02 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளித்த இந்த பரபரப்பான இடைத் தேர்தலில் 61.21 சதவீதம் வாக்குகளை பெற்ற முரளி பிள்ளை வெற்றி பெற்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply