ஒற்றுமையாக செயற்பட்டால் விடிவு ரெலோ தலைவர்:செல்வம் அடைக்கலநாதன்

selvamநாம் ஒற்றுமையாக செயற்பட்டால் தான் விடிவுகிடைக்கும் வெறுமனே உதட்டளவில் பேசி செயற்பட்டால் எமது இனத்தை அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்று அழிந்து விடுவோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றக் கிளுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தின் (ரெலோ) தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 30ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை அரசு எமது இனத்தை நசுக்க நினைத்த காரணத்தால் அகிம்சை போராட்டம் குழிதோண்டி புதைக்கப்பட்டு ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடிவை எட்ட முடி யும் என்ற நம்பிக்கையுடன் ஆயுதப் போராட்ட த்தை தொடங்கினோம்.

எனினும் ஆயுதப்போராட்டத்தால் ஈழத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கை சிதைக்கப்பட்டு இன்று ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டும் அகிம்சை போராட்டத்தை நடத்தவும், எமது விடிவுக்கு ஐ.நாவிடம் செல்லவேண்டும் சர்வதேசத்தை அழைக்க வேண்டும் என செய ற்பட்டுக் கொண்டிருப்பதும் எங்களுக்குள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிகளை நீட்டிய தன் பெறுபேறுதான் தற்போது அதை அனுபவிக்கிறோம்.

ஒற்றுமை என்பது நாம் வரலாற்று ரீதியாக பார்த்த உண்மை. இந்த ஒற்றுமை இல்லை என்றால் எங்களுடைய, இனத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை தற்போது அறிந்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் ஏனைய கட்சிகளாக இருக்கலாம் எங்களுக்கு முன்னால் உள்ள உதாரணங்களை படி த்தறிந்து செயற்படாவிட்டால் எமது இனத்தை மீண்டும் எந்தவழியும் கிடைக்காத இனமாக தேவைக்கு கையேந்தும் இனமாக செல்லும் வாய்ப்பை இட்டுச் செல்லப்போகிறோம் என்ற அபாயநிலை இப்போது இருந்து கொண்டு இருக்கிறது.

சிறீ சபாரத்தினம் ஒற்றுமை என்பதை ஆழமாக சிந்தித்தார். சிறப்பாக செய்து காட்டினார் என்பதை அனைத்து இயக்கங்களும் அறிந்திருந்தார்கள். கடந்தகாலத்தில் நண்பர்களின் பிரிவும் வேதனையை தந்தது. ஒற்றுமையான சூழல்களையும் இழந்த நிலையில் இருந்தோம்; பின் பிரிந்தோம்.

இன்று அனைத்து விடயங்களிலும் அனுபவங்களை தாண்டிவந்து மக்களை இழந்து புதிய அரசு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அவையும் அழிந்து கெடுபிடிகள் அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில் எதிர் அணியினர் எமது கருத்துக்கள் அனைத்துக்கும் எதிராக செயற்படும் நிலையில் நாம் ஒற்றுமைப்படவில்லை என்றால் எமது இனத்தின் அழிவுக்கு நாம் காரணமாகி விடுவோம்.

நாம் ஒற்றுமைப்பட வேண்டும் ஒன்றாக இருக்கவேண்டும், ஒன்றாகசெயற்பட்டால் தான் விடிவு கிடைக்கும் என உதட்டளவில் எவரும் பேசக்கூடாது என்பதை கூறிக்கொள்கிறேன்.

வெறுமனே உதட்டளவில் பேசி செயற்பட்டால் எமது இனத்தை அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்று விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எமது இனத்தை எவரிடமும் கையேந்தும் நிலைக்குகொண்டு செல்ல ஒருபோதும் இடமளிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply