பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: ரோட்ரிகோ டுட்டெர்டே அபார வெற்றி
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது புதிய அதிபர், துணை அதிபர், 300 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் சுமார் 18 ஆயிரம் பேரை தேர்வு செய்யப்பட்டனர்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் மக்களின் வறுமை நிலையை போக்க ஆட்சியாளர்கள் யாரும் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் தற்போதைய அதிபரான பெனிக்னோ அக்வினோ-வுக்கு மக்களின் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
அக்வினோவை சேர்த்து மொத்தம் ஐந்துபேர் அதிபர் பதவிக்கு போட்டினர். இந்நிலையில், அதிரடிக்கு பேர்போனவரும், டாவாவ் நகர மேயருமான ரோட்ரிகோ டுட்டெர்டேவு அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை நிலவரப்படி எண்ணப்பட்ட 90 சதவீத வாக்குகளில் டுட்டெர்டேவுக்கு 39 சதவீதம் வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக மேனுவல் ரோஸஸ் 23 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் டுட்டெர்டேவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டுட்டெர்டே, ”மக்கள் அளித்துள்ள தேர்தல் முடிவுகளை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். என்ன வாக்குறுதிகளை நான் அளித்தேனோ அதனை நிறைவேற்ற மிகவும் பாடுபடுவேன்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply