வட கொரிய தலைவரின் அணு ஆயுத கொள்கைக்கு கட்சி பிரதிநிதிகள் ஒப்புதல்

NORTH KOREAவடகொரியா நாட்டில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் தலைவராக பதவி வகிக்கும் 33 வயது கிம் ஜாங் அன், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறார். ஐ.நா. சபை மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி அணுகுண்டுகளை வெடித்தும், அணுசக்தி ராக்கெட்டுகளையும் வடகொரியா ஏவி வருகிறது. 

 

இந்த நிலையில், கிங் ஜாங் அன்னின் ஆளும் தொழிலாளர் கட்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பியாங்யாங் நகரில் தொடங்கியது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர் கட்சி மாநாடு நடைபெறவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒருபோதும் அதுபோல் நடந்தது இல்லை.

 

இந்த மாநாடு 1980-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக கூட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போதைய தலைவர் கிங் ஜாங் அன் பிறந்த பின்பு இப்போதுதான் முதல் முறையாக கட்சி மாநாடு நடக்கிறது.

 

கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் தொடர்ந்து வடகொரியா ஈடுபடும் எனவும், அதே நேரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும் என்றும் கூறி இருந்தார். அவருடைய இந்த இரட்டை கொள்கைகைகளையும் ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரதிநிதிகள் அமைப்பு முறைப்படி ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

 

இந்த இரட்டை கொள்கை குறித்து வடகொரியா வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தரத்திலும், எண்ணிக்கை அளவிலும் நாட்டை மேம்படுத்துவது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.

 

அதே நேரம் பொருளாதார கட்டமைப்பை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முன்னெடுத்துச் செல்வது என்ற கொள்கையையும், தொழிலாளர் கட்சி பிரதிநிதிகள் அமைப்பு ஏற்றுக் கொண்டு உள்ளது.

 

இதேபோல், அணு ஆயுத விஷயத்தில் பக்கத்து நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் பாணியிலும் ஒரு கொள்கை அறிவிப்பை கட்சி பிரதிநிதிகள் அமைப்பு வெளியிட்டது. அதில், நமது நாட்டின் இறையாண்மையில் யாரும் தலையிடாதவரை இன்னொரு நாட்டின் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம். அதே நேரம், தென் கொரியா போரைத்தான் விரும்புகிறது என்றால், நமக்கு எதிராக படை திரளும், அத்தனை சக்திகளையும் கருணையின்றி நிர்மூலம் ஆக்குவோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணு ஆயுத கொள்கை குறித்த கொள்கையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply