ஈராக்கில் அமெரிக்க போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்
ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த அன்பர் மாகாணத்தில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த போர்விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அன்பர் மாகாண ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகான் அறிவித்துள்ளது. அன்பர் மாகாணத்தில் உள்ள ருத்பா நகரின் அருகே உள்நாட்டு படைகளின் உதவியுடன் கடந்த ஆறாம்தேதி அமெரிக்க போர்விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் சார்பில் அம்மாகணத்தின் தளபதியாக செயல்பட்டுவந்த அபு வாஹிப் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக பென்டகான் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் இன்று தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அபு வாஹிபின் மரணம் பேரிடியாக அமையும் என்று நம்புவதாகவும், இதேபோல் பன்னாட்டு படைகளின் ஒத்துழைப்புடன் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் துடைத்தெறியப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply