பாக்தாத் கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு: ஐ.எஸ் பொறுப்பேற்பு
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மூன்று இடங்களில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.ஐ.எஸ் அமைப்பு பாக்தாத் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக ஷியா பிரிவு வழிபாட்டு தலங்களை குறித்து தாக்குதல்கள் அவ்வவ்போது நடைபெறுகின்றன.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவு மக்கள் அதிமுள்ள சத்ர் நகர் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் அருகில் உள்ள கார்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜிகாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈராக் அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், கொடூர தாக்குதல் இதுவாகும்.
94 பேரை பலி கொண்ட இந்த தாக்குதலுக்கு ஈராக் நாட்டில் உள்ள ஐ.நா தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply