தலைமறைவு குற்றவாளி’யாக முஷாரஃப் அறிவிப்பு
தேசத் துரோக வழக்கில் நேரில் ஆஜராகாத பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃபை, “தலைமறைவான குற்றவாளி’யாக அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. பாகிஸ்தானில் 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை செல்லாததாக்கும் உத்தரவை அப்போதைய அதிபர் முஷாரஃப் பிறப்பித்தார். இது தொடர்பான தேசத் துரோக வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக முஷாரஃபை நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவிட்டும், பல்வேறு காரணங்களைக் கூறி அவர் நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக துபை சென்றுள்ள அவரை 30 நாள்களுக்குள் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்தக் கெடு முடிவடைந்த நிலையிலும் முஷாரஃபை நேரில் ஆஜர் படுத்த முடியாததால், அவரை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்து செய்தித் தாள்கள் மூலமாகவும், சுவரொட்டி மூலமாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply