நைஜிரியாவில் அரசு அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி
நைஜிரிய நாட்டின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் நுழைவாயில் அருகே பைத்தியம் போல் பாசாங்கு செய்தவர் தன்னுள் இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ள போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கக் கூடும் என்று நைஜிரிய அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply