பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது : சி.வி.விக்கினேஸ்வரன்

vikiதமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது. இந்நிலையில், இன்னுமொரு பிரபாகரன் மறுஅவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்பதை எடுத்துரைத்த முதலமைச்சர், மத்திய அரசாங்கத்தின் நேரடி தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எழுத்தாளர் குசால் பெரேராவின் நூல் வெளியீடும், திறந்த கலந்துரையாடலும் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்றபோது பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply