வங்காளதேசத்தில் புத்த தேவாலயத்துக்குள் துறவி படுகொலை
வங்காளதேசம் நாட்டில் உள்ள புத்த தேவாலயத்துக்குள் தலைமை பிட்சுவின் கழுத்தை அறுத்து சிலர் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள சிட்டாகாங் மலைப்பகுதி மாவட்டம், பந்தர்பாம் நாய்க்கியாங்சாரி பகுதியில் உள்ள புத்த தேவாலயத்தில் தலைமை பிட்சுவாக உள்ள மாங் ஷோய் வூ(70) இன்று காலை தேவாலயத்தின் உள்ளே கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் கொல்லப்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும்போது கடந்தவாரம் ராஜ்ஷாஹி பகுதியில் கொல்லப்பட்ட முஸ்லிம் சூபி அறிஞர் மற்றும் கடந்த மாதம் 30-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்ட இந்து டெய்லர் ஆகியோரின் கொலையில் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசையாக இந்த சம்பவம் இருக்கலாம் என கருதும் போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply