அமெரிக்க அதிபர் தேர்தல்: ரூ.2693 கோடி செலவில் வேட்பாளர் டி.வி. பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந்தேதி நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், பர்னிசாண்ட்சும் களத்தில் உள்ளனர்.குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் அனைவரும் பாதியிலேயே வாபஸ் பெற்றுக் கொண்டனர்.இவர்கள் மாகாணம் வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற்று வருகின்றனர். அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகின்றனர். குறிப்பாக டி.வி.யில் விளம்பரப்படுத்தி பிரசாரம் செய்கின்றனர்.
அதன் மூலம் கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக இதுவரை ரூ.2693 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் விளம்பரங்கள் டி.வி.க்களில் ஒளிபரப்பாகியுள்ளன.
அவற்றில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பெர்னிசாண்ட்ர்ஸ் 1 லட்சத்து 24 ஆயிரத்து 732 விளம்பரங்களும், ஹிலாரி கிளிண்டன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 376 விளம்பரங்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 33 ஆயிரத்து 50 விளம்பரங்களே ஒளிபரப்பாகியுள்ளன.
பெர்னி சாண்டர்ஸ் ரூ.486 கோடியும், ஹிலாரி கிளிண்டன் ரூ.413 கோடியும் செலவிட்டுள்ளனர். டொனால்டு டிரம்ப் ரூ.122 கோடி மட்டுமே செலவு செய்துள்ளார்.
பிரசாரத்தை பொறுத்த வரை ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமாவின் பெண்கள் உரிமைகள், ஹெல்த்கேர் மற்றும் கல்வி போன்றவற்றை முன்னிலைபடுத்தினார். பெர்னி சாண்டர்ஸ் பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை வைத்து பிரசாரம் செய்தார்.
டொனால்டு டிரம்ப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்கள் பிரச்சினை, வெளியுறவு கொள்கைகளில் மாற்றம், சுற்று சூழல் பாதிப்பு பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply