விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதாக தப்பி வந்த மக்கள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் இன்று புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார்.

இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply