இலங்கை நிலச்சரிவில் இருவர் பலி: 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை

esteatஇலங்கையில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மலையகப் பகுதி உட்பட 8 மாவட்டங்களில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.கேகாலை மாவட்டம் தெகியோவிற்ற பகுதியில் உள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டநிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இரு வீடுகள் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள தோட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும்நிலச்சரிவு எச்சரிக்கை காரணமான 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த இரு நாட்களாக இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலை காரணமாக பிரதான நீர் அணைகளும்,நீர் நிலைகளும் நீர் நிரம்பிப் பாய்வதால் அவைகளின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் பாய்வதால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.சீரற்ற கால நிலை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply